என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம்
நீங்கள் தேடியது "மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம்"
மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் எதிரில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மார்த்தாண்டம்:
மார்த்தாண்டம் புது பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடை முன்பு இன்று காலை முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாகச் சென்றவர் முதியவரின் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் ராஜகோபால், சிங் ஆகியோர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரது பையில் விஷ பாட்டிலும், ஒரு செல்போனும் இருந்தது. அந்த செல்போனை எடுத்து விசாரித்தபோது பிணமாக கிடந்த நபர் முளகுமூடு பறைக்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பது தெரியவந்தது. இவர் கேரளாவில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் மார்த்தாண்டம் வந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. ராஜேந்திரனுக்கு மனைவி மற்றும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
ராஜேந்திரன் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். மார்த்தாண்டம் பஸ்நிலைய பகுதியில் கடந்த சில தினங்களில் மட்டும் 3 முதியவர்களின் பிணங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் ராஜேந்திரனும் பஸ்நிலைய பகுதியில் இறந்து கிடந்தது அந்த பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
×

X